மனைவியுடன் மருத்துவமனையில் கேக் வெட்டி கொண்டாடிய கைதி..!
கடலூரில் போலீஸ் பாதுகாப்பில் இருந்த ரவுடி தனது மனைவியுடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடியது குறித்து காவல்துறை உயர் அதிகாரிகள் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
கத்தியை வைத்து ரகளையில் ஈடுபட்ட ஒருவரை வெட்டிய வழக்கில் ரவுடி சூர்யாவை போலீசார் பிடிக்க முயன்ற பொழுது கீழே விழுந்ததால் கை, காலில் அவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
போலீஸ் பாதுகாப்புடன் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சூர்யா கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடியிருப்பதால் அங்கு பணியில் இருந்த போலீசாரிடம் காவல்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.





