திருப்பூரில் பனியன் ஏற்றுமதி நிறுவனத்தில் கடும் தீ விபத்து..!
திருப்பூர் அனுப்பர்பாளையம் ஏவிபி ரோட்டில் உள்ள கலைவாணி தியேட்டர் பின்புறம் செயல்பட்டு வரும் பனியன் ஏற்றுமதி நிறுவனத்தில் கடும் தீ விபத்து. திருப்பூர் வடக்கு, அவிநாசி தீயணைப்பு நிலையத்தைச் சேர்ந்த 4 க்கும் மேற்பட்ட தீயணைப்பு வண்டிகள் அப்பகுதி மக்கள் ஒத்துழைப்புடன் தீயை அணைக்க கடுமையாக போராடி வருகிறார்கள்.

பனியன் நிறுவனத்தில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. விபத்தில் பனியன் நிறுவனத்தின் கண்ணாடிகள் வெடித்து சிதறி வருகிறது. இதனால் ஏற்பட்ட கரும்புகை சுமார் 1 கிலோ மீட்டர் தூரத்திற்கு வானில் பரவி வருகிறது.இத்தீவிபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்துள்ளது
📱 Share on WhatsApp 𝕏 Share on X




