--- --:--:-- --

பார் உரிமையாளருக்கு எச்சரிக்கை..ஆட்சியர் அதிரடி..!

1

டாஸ்மாக்கில் பிளாஸ்டிக் குப்பைகளை உடனடியாக அகற்றுமாறு உத்தரவிட்ட பெரம்பலூர் ஆட்சியர் களத்தில் நின்று நடவடிக்கை எடுத்தார். பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் ஊராட்சி ஒன்றிய வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்ய சென்று சாலையோரம் பெருமளவில் பரவி கிடந்த பிளாஸ்டிக் கவர்களை பார்த்து அதிர்ந்து போனார்.

 

உடனடியாக வாகனத்தை நிறுத்த சொல்லி இறங்கியவர் ஈரோடு டாஸ்மாக் மற்றும் பாருக்குள் சென்று ஆய்வு செய்தார். பார் உரிமையாளரை அழைத்த அவர் பிளாஸ்டிக் பொருட்கள் பரவி கிடப்பது தெரியவில்லையா என கடிந்து கொண்டார் ஆட்சியர்.

 

பிளாஸ்டிக் தடை குறித்து தெரியாதா என வினவினார். உடனடியாக பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற வேண்டும் என உத்தரவிட்ட அவர் களத்தில் நின்று செயல்பட வைத்தார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon