--- --:--:-- --

நெல்லை மாநகராட்சி பெண் கவுன்சிலரின் பரபரப்பு ராஜினாமா கடிதம்..!

3

நெல்லை மாநகராட்சி அதிகாரிகளிடையே சாதிய பாகுபாடு இருப்பதாக கூறி பதவி விலக்குவதாக பெண் கவுன்சிலர் எழுதிய ராஜினாமா கடிதம் பரபரப்பை ஏற்படுத்துகிறது. நெல்லை மாநகராட்சி 36-வது வார்டு கவுன்சிலராக திமுகவைச் சேர்ந்த சின்னத்தாய் உள்ளார்.

 

அவர் தனது பதவியை ராஜினாமா செய்வதாக மேயருக்கு எழுதிய கடிதம் வெளியாகியுள்ளது. அந்த கடிதத்தில் அவர் மாநகராட்சி ஆணையர் உயர் ஜாதி, மாமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து தன்னை பழிவாங்கும் நோக்கில் தனது வார்டுக்கு தண்ணீர் வழங்கும் நடைமுறையை மாற்றியதாக சின்ன தாய் குற்றம் சாட்டியுள்ளார்.

 

மாநகராட்சி அதிகாரிகளிடம் சாதி தலைவிரித்து ஆடுவதாகவும் நாடாளுமன்ற தேர்தலின் பொழுது பல்வேறு நிலைகளில் அவமானப்படுத்தப்பட்டதாகவும் கூறியிருந்தார்.

 

அதிகாரப்பூர்வமாக இந்த ராஜினாமா கடிதத்தை அளிக்கவில்லை என்றும் பாளையங்கோட்டை திமுக சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வஹாப் பிரச்சனைகளுக்கு நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததாக கூறிய கிருஷ்ணன் அவரது அறிவுரைகளை ஏற்று ராஜினாமா முடிவை தாங்கள் கைவிட்டு இருப்பதாக கூறினார்.

 

Right Menu Icon