விஜயகாந்த் மறைந்து நூறாவது நாள் நினைவிடத்தில் பிரேமலதா அஞ்சலி..!
தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைந்து நூறாவது நாளையொட்டி தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் சென்னை கோயம்பேட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.
விஜயகாந்த் நினைவிடத்தில் பிரேமலதா மற்றும் அவரது இளைய மகன் சண்முகபாண்டியன் ஆகியோர் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். நடிகர் ரோபோ சங்கர் தனது மனைவி மற்றும் சமீபத்தில் திருமணம் முடிந்த தனது மகள் மற்றும் மருமகனுடன் மரியாதை செலுத்தினார். சண்முக பாண்டியன் நடித்துள்ள படைத்தலைவன் திரைப்படத்தின் முன்னோட்டத்தை பிரேமலதா வெளியிட்டார்.





