முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வீட்டில் நடந்த முக்கிய கூட்டம்..!
விருதுநகரில் உள்ள முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வீட்டில் தென்காசி மக்களவைத் தொகுதிக்கான வியூகங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
தென்காசி மக்களவைத் தொகுதி அதிமுக கூட்டணியான புதிய தமிழகம் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த தொகுதியில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி போட்டியிடுகிறார்.
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வீட்டில் தென்காசி தொகுதிக்கான வியூகங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. இதில் முன்னாள் அமைச்சர் இன்பத் தமிழன் ஸ்ரீவில்லிபுத்தூர் எம்எல்ஏ மான்ராஜ் மற்றும் அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை நேரில் சந்தித்த அனைத்து மருத்துவ மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் அதிமுகவுக்கு முழு ஆதரவு வழங்குவதாக தெரிவித்தனர்.





