--- --:--:-- --

ஒற்றை யானையால் பக்தர்களுக்கு அச்சுறுத்தல்..!

7

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே கிராம பகுதிகளில் சுற்றி திரியும் ஒற்றை யானையால் யாதேஸ்வர மலை கோயிலுக்கு நடந்து செல்லும் பக்தர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

 

ஓசூர் கருகே மாசு மலைக்கோட்டை கிராமத்தில் உள்ள சாலையில் ஒற்றை காட்டு யானை சர்வ சாதாரணமாக நடந்து சென்றதுடன் பல்வேறு இடங்களிலும் சுற்றித்திரிந்தது. இந்த யானை செவித்திறனை இழந்திருப்பதாக கூறப்படுகிறது.

 

யானையை விரட்ட பட்டாசுகள் வெடித்தாலும் காது கேட்காததால் நகர்ந்து செல்வதில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் பொதுமக்கள் யானையை விரட்டும் என்றும் வனப்பகுதிக்கு செல்லாமல் அந்த பகுதிகளில் நீண்ட நேரம் சுற்றி திரிந்தது.

 

கர்நாடகா மாநிலத்தில் உள்ள மாதேஸ்வர மலை கோவிலில் சாமி தரிசனம் செய்ய ஓசூர் தேன்கனிக்கோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் ஏராளமான பக்தர்கள் தினமும் நடந்து செல்கின்றனர். பக்தர்கள் கிராமப் பகுதி சாலை வழியாக ஒற்றைக் காட்டு யானையால் அச்சுறுத்தல் ஏற்படும் நிலை உள்ளது.

 

எனவே யானை உடனடியாக அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என்ற கோட்டை கிராம மக்கள் வனத்துறையினருக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

 

Right Menu Icon