பிரதமர் மீது முதலமைச்சர் ஸ்டாலின் விமர்சனம்..!
ஊழல்வாதிகளை கட்சியில் இணைத்து உத்தமர்கள் ஆக்கிவிட்டு ஊழலை ஒழிப்போம் என்று பொய்களை கூறி வருவதாக பிரதமர் நரேந்திர மோடியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்து இருக்கிறார்.
கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் பாஜகவில் இணைந்து எதிர்க்கட்சி தலைவர்கள் 25 பேரில் 23 பேருக்கு ஊழல் வழக்குகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற செய்தி வெளியானது. இந்த செய்தியை குறிப்பிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சமூகவலைத்தளத்தில் பிரதமர் மோடியும், மத்திய பாஜக அரசையும் கடுமையாக விமர்சித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





