நர்சிங் மாணவி கருக்கலைப்பு உதிரப்போக்கு அதிகமானதால் உயிரிழந்த சிறுமி..!
கர்ப்பமான நர்சிங் மாணவிக்கு கருக்கலைப்பு செய்யப்பட்டதால் உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த மாணவியை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் மேட்டுப்பட்டி பகுதியைச் சேர்ந்த நர்சிங் கல்லூரி மாணவி பெற்றோரை இழந்த நிலையில் பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்து வந்தார்.
காந்திகிராம் பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் விடுதியில் தங்கி சிறுமி படித்து வந்தார். சிறுமியின் உடலில் மாற்றங்கள் இருப்பதை அறிந்த உறவினர் ஒருவர் சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்தை சென்று பரிசோதித்த பொழுது கர்ப்பமாக இருந்தது தெரிய வந்தது.
ராம்குமார் என்பவரை சிறுமி காதலித்து வந்ததும் இருவரும் நெருக்கமாக பழகி வந்ததும் தெரிய வந்திருக்கிறது. அதனை தொடர்ந்து உறவினர் திருச்சி துறையூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்து சிறுமியின் கர்ப்பத்தை கலைத்துள்ளார்.
ஆனால் பல மணி நேரமாகியும் உதிரப்போக்கு மற்றும் மூச்சு திணறல் இருக்காதால் சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பாக உறவினர் அளித்த புகாரின் பேரில் காதலன் ராம்குமார் கர்ப்பத்தை கலைக்க முயற்சித்த அவரது உறவினர் மற்றும் தனியார் மருத்துவமனையின் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.





