அத்தையுடன் தகாத உறவு.. பணத்திற்காக கொலை..!
பெங்களூருவில் பணத்திற்காக எரித்துக் கொன்ற பொறியியல் பட்டதாரியை போலீசார் கைது செய்தனர். பெங்களூரு கொட்டகம்பள்ளி பகுதியைச் சேர்ந்த சுகன்யா என்பவர் கடந்த மாதம் திடீரென மாயமானார். குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
இதனிடையே வண்ணாரப்பேட்டை பகுதியில் எரிந்த நிலையில் மனித எலும்பு கூடுகள் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் விரைந்து சென்ற போலீசார் எலும்புக்கூடுகளை மீட்டு விசாரித்த பொழுது காணாமல் போன சுகன்யாவின் உடல் என தெரிய வந்தது.
இது குறித்து போலீசார் விசாரணை நடத்திய பொழுது சுகன்யா கணவரின் சகோதரி மகன் எஸ்வந்த் நடவடிக்கையில் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரிடம் போலீசார் கிடுக்குபிடி விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் தகவல் வெளியானது. எஸ்வந்திருக்கும் அவரது அத்தைக்கும் இடையே தகாத உறவு இருந்து வந்ததும் சுகன்யாவிடம் இருந்து எஸ்வந்த் அடிக்கடி பணம் வாங்கி வந்ததும் தெரியவந்தது.
ஒரு கட்டத்தில் சுகன்யா பணம் தர மறுத்ததால் ஆத்திரமடைந்த யஷ்வந்த் தனது அத்தகையை கடந்த 14ஆம் தேதி காரில் வெளியே அழைத்துச் சென்று அவரை கழுத்தை நெரித்து கொலை செய்தவுடன் உடலை பெட்ரோல் ஊற்றி எரித்து விசாரணையில் உறுதியாகி உள்ளது. அதனை தொடர்ந்து எஸ்வந்தை போலீசார் கைது செய்தனர்.





