--- --:--:-- --

இளநீரை பறிக்க முயன்ற போது மேலிருந்து விழுந்த ஐடி ஊழியர் பலி..!

8

தென்னை மரத்தில் இளநீர் பறிக்கும் பொழுது மேடையில் இருந்து கீழே விழுந்த ஐடி ஊழியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது, சென்னை ஆதம்பாக்கம் அருகே தில்லை கங்கா நகர் பகுதியை சேர்ந்தவர் பாஸ்கர்.

 

இவர் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள ஐடி நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் வீட்டின் மொட்டை மாடியில் இளநீர் பறிக்க முயன்ற பொழுது பாஸ்கர் தவறி கீழே விழுந்தார்.

 

இதில் தலை மற்றும் உடலில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்று வருகிற நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon