போராட்டத்தால் உடல் நலம் பாதித்தவர்களை அமைச்சர் கீதா ஜீவன் சந்தித்து ஆறுதல்..!

போராட்டத்தால் உடல் நலம் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பார்வை மாற்றுத்திறனாளிகளை அமைச்சர் கீதாஜீவன் நேரில் சந்தித்து போராட்டத்தை கைவிடுமாறு வலியுறுத்தினார்.

 

9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் போராட்டத்தால் உடல்நிலை பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பார்வை மாற்றுத்திறனாளிகளை அமைச்சர் கீதா ஜீவன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அப்பொழுது கோரிக்கைகள் நேற்று நிறைவேற்றப்படும் என்று உறுதி அளித்து அமைச்சருக்காட்சியுடன் போராட்டத்தை கைவிடுமாறு கேட்டுக் கொண்டார்.