--- --:--:-- --

கள்ளக்காதலால் கணவனுக்கு நடந்த விபரீதம்..!

5

ர்மபுரி அருகே தகாத உறவில் இருந்த நபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் இறப்பில் மர்மம் இருப்பதாக கூறி மனைவி கதறி அழுதது வேதனை அளித்தது.

 

அரூர் பகுதியைச் சேர்ந்த சரவணன் என்பவருக்கு செல்வி என்பவர் உடன் திருமணமாகி மூன்று பிள்ளைகள் உள்ளனர். இதனிடையே அதே பகுதியைச் சேர்ந்த காஞ்சனா என்பவருக்கு அவரது கணவர் இறந்த நிலையில் சரவணனுடன் தகாத உறவு ஏற்பட்டுள்ளது.

 

இதனால் ஏற்பட்ட குடும்ப தகராறு மனைவி செல்வி தனது பிள்ளைகளுடன் தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். இந்த நிலையில் சரவணன் புளிய மரத்தில் கால்கள் தரையில் பட்டப்படி தூக்கிட்ட நிலையில் இறந்து கிடந்தார். தகவலின் பெயரில் வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

சரவணன் உடலில் காயங்கள் இருந்ததால் அவருடன் தகாத உறவில் இருந்த காஞ்சனா கொலை செய்திருக்கலாம் என செல்வி புகார் அளித்தார். அதன் பெயரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Right Menu Icon