தாலி கட்டியதும் மருத்துவமனைக்கு ஓடிய புதுமண தம்பதி..!
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தனது தந்தையிடம் புதுமண தம்பதிகள் ஆசி பெற்ற நிகழ்வு காண்போரை நெகிழ செய்துள்ளது. மணப்பாறை அருகே உள்ள சக்திவேல் என்பவரது மகள் நிவேதா.
இவருக்கும் மணிவேல் என்பவருக்கும் திருமணம் செய்ய இரும்பு குடும்பத்தினர் முடிவு செய்தனர். அதன்படி திருமணத்தை 13ம் தேதி வைக்க முடிவு செய்த நிலையில் திடீரென மணப்பெண்ணின் தந்தை சக்திவேல் உடல்நலம் பாதிக்கப்பட்டு மணப்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனால் திருச்சியிலிருந்து குடும்பத்தினர் நிவேதாவின் திருமணத்தை நேற்று நடத்தினர். பின்னர் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் தந்தையிடம் புதுமனை தம்பதிகள் ஆசி வாங்கியது காண்போரின் நெஞ்சை நெகிழ வைத்தது.





