சென்னையில் குடிநீர் கிடைக்க புதிய ஏற்பாடு.. மாநகராட்சி எடுத்த நடவடிக்கை..!
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கல்குவாரிகளில் தேங்கிய தண்ணீரை சுத்திகரிப்பு செய்து சென்னை மாநகராட்சி பகுதிகளில் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்ட தகவலில் 25க்கும் மேற்பட்ட கல்குவாரிகளில் உள்ள மழை நீரை செம்பரம்பாக்கத்தில் உள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டு செல்வதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமும் 30 மில்லியன் லிட்டர் தண்ணீர் சுத்திகரிப்பு செய்து அதனை சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குடிநீர் விநியோகிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் மூலம் வடகிழக்க பருவமழையின் பொழுது கிடைக்கப்பெறும் குவாரிகளில் சேகரிக்கப்பட்டு அருகாமையில் உள்ள கிராமங்களுக்கு வெள்ள பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.





