போதையில் அடுத்தடுத்த வாகனங்கள் மீது மோதி விபத்து..!
ராமேஸ்வரத்தில் மது போதையில் காரை இயக்கி அடுத்தடுத்து ஐந்து வாகனங்கள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற கோயில் பாதுகாப்பு அதிகாரியை பொதுமக்கள் வடக்கு பிடித்தனர்.
மருதபாண்டிய நகரை சேர்ந்த ஓய்வு பெற்ற ராணுவ வீரரான ஜெயராமன் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயில் பாதுகாப்பு அதிகாரியாக பணி செய்து வருகிறார்.
தனது காரில் பேருந்து நிலையத்திலிருந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்த ஜெயராமன் சாலையில் நடந்து சென்ற இரண்டு பெண்கள் மற்றும் இரண்டு ஆட்டோக்கள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றதாக கூறப்படுகிறது.
அவரை ஆட்டோ மற்றும் டூவீலரில் சிலர் தொகை திட்டக்குடி சந்திப்பில் மற்றொரு இரு சக்கர வாகனத்தின் மீதும் கார் மோதியது. இதனால் அங்கிருந்தவர்கள் ஜெயராமனை சூழ்ந்து கொண்டு கீழே இறங்கிய பொழுது அவர் மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது.
இதனையடுத்து அவரை பொதுமக்கள் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.





