--- --:--:-- --

விஜயகாந்த் உடல்நிலையில் சற்று பின்னடைவு..!

7

தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்த் உடல்நிலையில் பின்னடைவு என அவரது மகன் விஜயபிரபாகரன் தெரிவித்துள்ளார். தேமுதிக நிறுவன தலைவரும் அக்கட்சியின் பொதுச்செயலாளருமான விஜயகாந்தின் மூத்த மகன் விஜயபிரபாகரன், இளைய மகன் திரைப்பட நடிகர் சண்முக பாண்டியன், இருவமும் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தனர்.

 

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய விஜயபிரபாகரன் கூறுகையில், “கேப்டன் விஜயகாந்தின் உடல்நலத்தில் சற்று பின்னடைவு தான், ஆனால் கேப்டன் விஜயகாந்த் 100 வருடம் நல்லா இருப்பார், அவர் பழையபடி பேசுவார், எழுந்து வருவார் அதற்கான முயற்சிகளை செய்து வருகிறோம்.

 

உங்களை மாதிரியே நாங்களும் நம்புகிறோம். இப்போது வரைக்கும் கேப்டன் நலமாக தான் இருக்கிறார். கேப்டனின் மந்திரமே “முடியாது என்பது முட்டாளுக்கு சொந்தமானது” என சொல்லுவார். அதைதான் எங்களது தாரக மந்திரமாக எடுத்துள்ளோம்.

 

என்னுடைய கனவை கூட ஒதுக்கி வைத்துவிட்டு தொண்டர்களுக்காக ஓடோடி வந்து வேலை செய்கிறேன். ” என தெரிவித்தார்

Right Menu Icon