--- --:--:-- --

தம்பி அடித்ததில் உயிரிழந்த அண்ணன்..!

9

திருப்பத்தூரில் தம்பி அடித்ததில் மதுபோதையில் இருந்த அண்ணன் உயிரிழந்தான். திருப்பத்தூரை சேர்ந்த ஆஷ்ரத் என்பவர் நேற்று இரவு மது போதையில் அக்கம் பக்கத்தினரிடம் தகராறு செய்துள்ளான். இதனை தொடர்ந்து அசரத்தை தம்பி ரியாஸ் சமாதானம் செய்ய முயற்சித்துள்ளார்.

 

அப்பொழுது அவசரத்தின் தலையில் கட்டையால் அடித்ததாக கூறப்படுகிறது. அதில் மயக்கமான அசரத்தை வீட்டினுள் இழுத்து சென்று படுக்க வைத்துள்ளனர். காலை நீண்ட நேரம் ஆகியும் வெளியே வராததால் உள்ளே சென்று பார்த்த பொழுது அசரத் இறந்து கிடந்துள்ளான்.

 

இது குறித்த புகாரின் பேரின் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Right Menu Icon