வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக மல்யுத்த வீராங்கனை புகார்..!
வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக கணவர் மற்றும் மாமியார் மீது பிரபல மல்யுத்த வீராங்கனை குற்றம் சாட்டி அரசின் உதவியை நாடியுள்ளார். மத்திய பிரதேசத்தை சேர்ந்த பிரபல மல்யுத்த வீராங்கனை இராணி. இவருக்கு கடந்த 2020 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.
இவர் தனது கணவர் மற்றும் மாமியார் மீது காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை தெரிவித்துள்ளார். அதில் கணவர் மற்றும் மாமியார் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி வருவதாகவும் சில நேரங்களில் வரதட்சனை தரவில்லை என்றால் வீட்டை விட்டு வெளியேறுமாறு அடித்து துன்புறுத்துவதாகவும் தெரிவித்திருந்தார். இந்த விவகாரத்தில் அரசாங்கம் தான் உதவ வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.





