பள்ளிக்கு போதையில் வந்த ஆசிரியர்..பெற்றோர்கள் அதிர்ச்சி..!
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே அரசு துவக்கப்பள்ளி ஆசிரியர் ஒருவர் பணி நேரத்தில் மது போதையில் இருந்ததை கண்டு பெற்றோர்கள் மாவட்ட கல்வி அதிகாரியிடம் புகார் அளித்தனர்.
பள்ளியில் தலைமையாசிரியர் செல்வராஜ் வகுப்பாசிரியர் அறிவழகன் ஆகியோர் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் அறிவழகன் பணி நேரத்திலேயே மது குடித்துவிட்டு பள்ளிக்கு வருகை தருவதை கண்ட பெற்றோர்கள் மாவட்ட கல்வி அதிகாரிகளிடம் புகார் அளித்தனர்.
இதனையடுத்து எடப்பாடி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று சோதனை செய்த பொழுது அவர் மதுபோதையில் இருப்பது உறுதி செய்யப்பட்டது.





