பத்திரப்பதிவு செய்ய லஞ்சம் பெறும் அலுவலக உதவியாளர் வைரலாகும் வீடியோ..!
வாணியம்பாடி சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்ய உதவியாளர் லஞ்சம் பெறும் வீடியோ வைரல் ஆகியுள்ளது. திருப்பத்தூர் வாணியம்பாடியில் சார்பதிவாளராக ஒருவர் பணியாற்றி வருகிறார்.
இவர் அலுவலகத்தில் ஆட்கள் பற்றாக்குறை காரணமாக உதவியாளராக பணியாற்றி ஓய்வு பெற்ற மணி என்பவர் தற்காலிகமாக பணியமர்த்தப்பட்டார். இந்நிலையில் அலுவலகத்தில் வந்த பயனாளியிடம் கெஞ்சும் காட்சி வைரல் ஆகி வருகிறது.
மேலும் அலுவலகத்தில் தற்காலிகமாக பணியாளர் பயன்படுத்தப்படுபவர்களால் ஆபத்து உள்ளதாகவும் கையூட்டும் பெற வாய்ப்புள்ளதால் அதிகாரிகள் இது குறித்து விசாரணை நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றன.





