இறப்பதற்கு முன் வீடியோ வெளியிட்ட கார் டிரைவர்..!
திருவண்ணாமலை மாவட்டம் போரூர் அருகே நிலப்பிரச்சனைக்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் வீடியோ வெளியிட்டு கார் டிரைவர் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மணிகண்டனுக்கும் கருணாகரன் என்பவருக்கும் இடையே நில பிரச்சனை இருந்துள்ளது. இது குறித்து பலமுறை மனு அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் ஒரு சாராக செயல்பட்டதாக கூறி வீடியோ வெளியிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மணிகண்டனின் உறவினர்கள் மனு அளித்துள்ளனர்.





