--- --:--:-- --

முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்..!

7

முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளை விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

 

சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளுக்கான தொடக்க விழா நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட அமைச்சர் உதயநிதி போட்டிகளை தொடங்கி வைத்தார்.

 

பின்னர் கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் போட்டிகள் தொடங்கின. பின்னர் செய்தியாளிடம் பேசிய உதயநிதி கிராமப்புற விளையாட்டுகளையும் ஊக்குவிக்கவே இந்த நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதாக கூறினார்.

 

இந்த போட்டி நடத்த ஒதுக்கப்பட்ட ஐம்பது கோடி ரூபாயில் 27 கோடி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்க முடிவு செய்துள்ளதாக உதயநிதி தெரிவித்தார். ஆளுநர் குறித்த கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் உதயநிதி ஆளுநரின் செயல்பாடுகளை பற்றி தங்களுக்கு எந்த கவலையும் இல்லை என்று கூறினார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon