பச்சையப்பன் கல்லூரி மாணவனின் மண்டை உடைப்பு..!
சென்னை பச்சையப்பன் கல்லூரி வளாகத்தில் மாணவர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டதில் ஒரு மாணவர் காயமடைந்துள்ளார். பொங்கல் கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட மோதலில் ஒரு மாணவனின் மண்டை உடைக்கப்பட்டுள்ளது.
மாணவர்களின் மோதலால் பச்சையப்பன் கல்லூரி வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. கல்லூரி வளாகத்தில் போலீசாரை பார்த்து மாணவர்கள் தப்பி ஓடினர். பிரச்சனை காரணமாக மாறி மாறி கற்களை வீசித் தாக்கி கொண்டு உள்ளனர் கல்லூரி மாணவர்கள்.





