விழிப்புணர்வு மணல் சிற்பம் தொடர்பான முக்கிய குறிப்பு..!
பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிக்கவும் பெண்களின் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் வடிவமைக்கப்பட்டுள்ள மணல் சிற்பத்தை தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
சென்னை காமராஜர் சாலையில் உள்ள விவேகானந்தர் இல்லத்தின் எதிரே மெரினா கடற்கரையில் தமிழக அரசின் 181 மகளிர் சுய உதவி மையத்தின் சார்பில் மணல் சிறப்பம் வடிவமைக்கப்பட்டிருந்தது. ஆறு டன் மணல் மற்றும் ஆயிரம் லிட்டர் தண்ணீருடன் ஆறு நபர்கள் கொண்ட குழுவினர் சூழலுக்கு பாதிப்பு இல்லா ஆர்கானிக் வண்ணக் கலவையோடு இந்த சிற்பத்தை உருவாக்கியுள்ளனர்.
181 உதவி சேவை மையம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த சிற்பத்தை திறந்து வைத்த முதலமைச்சர் பெண்களுக்கு சமுதாயத்தை உருவாக்குவோம், பெண்களின் பாதுகாப்பிற்கான அனைவரும் உறுதி ஏற்ப்போம் போன்ற வாசகங்கள் அடங்கிய பலகையில் கையெழுத்திட்டார்.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் கீதா ஜீவன், நேரு பொன்முடி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.





