--- --:--:-- --

ரிமோட் வாக்குப்பதிவு இயந்திரம் – ஓபிஎஸ், இபிஎஸ்க்கு அழைப்பு..!

10

மிழக தேர்தல் ஆணையம் நடத்தும் ரிமோட் வாக்குப்பதிவு இயந்திரத்தின் செயல்பாடு குறித்த செயல் விளக்க கூட்டத்திற்கு அதிமுக சார்பில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என குறிப்பிட்டு பன்னீர்செல்வம், பழனிசாமி ஆகிய இருவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

 

புலம்பெயர் தொழிலாளர்களுக்காக ரிமோட் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை தேர்தல் ஆணையம் உருவாக்கியுள்ளது. இதன் செயல்பாடு குறித்து செயல்முறை விளக்கம் அளிப்பதற்காக அரசியல் கட்சிகளுக்கும் தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது.

 

தமிழகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளான அதிமுக, திமுகவில் உள்ளிட்ட கட்சிகளுக்கு ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்குமாறு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்திய பிரதா சாகு கடிதம் அனுப்பியுள்ளார்.

 

அதன்படி அதிமுகவுக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில் ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் என்ற அடிப்படையில் பன்னீர்செல்வம், பழனிசாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

 

Right Menu Icon