பிரதமர் மோடியையும், குடியரசுத் தலைவர் முர்முவையும் சந்தித்த கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை..!
பிரதமர் மோடி தலைமையில் இந்தியாவில் தொழில்நுட்பத் துறையின் வளர்ச்சி அதிகரித்துள்ளதாக கூகுள் நிறுவனத்தின் தலைமை செயலாதிகாரி சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார். டெல்லியில் பிரதமர் மோடியை சுந்தர் பிச்சை சந்தித்து பேசினார்.
தொழில்நுட்பம் போன்றவை தொடர்பாக சுந்தர் பிச்சையுடன் கலந்துரையாடியதாகவும் அவருடைய சந்திப்பு மகிழ்ச்சி அளிக்கக் கூடிய வகையில் இருந்ததாகவும் பிரதமர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
இந்தியாவுடன் நல்லுறவை தனது நிறுவனம் எதிர்நோக்குவதாகவும் ஜி 20 அமைப்பின் தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்பதற்கு முழு ஆதரவை வழங்குவதாகவும் சுந்தர் பிச்சை குறிப்பிட்டார். முன்னதாக குடியரசுத் தலைவர் மாளிகையில் குடியரசுத் தலைவர் சுந்தர் பிச்சை சந்தித்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





