--- --:--:-- --

கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ விவகாரம்: வீடு தேடி சென்று சம்மன் கொடுத்த காவல்துறை

7

கள்ளக்குறிச்சி தமிழக வெற்றி கழக எம் எல் ஏ அருள் விக்னேஷ் க்கு இன்று அனைத்து மகளிர் காவல் நிலைய அதிகாரிகள் நேரில் சென்று சம்மன் வழங்கினர். கள்ளக்குறிச்சி, பெண் கலெக்டருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய கள்ளக்குறிச்சித.வெ.க. எம்.எல்.ஏ. மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது இதையடுத்து அவரை கைது செய்ய போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மேலும் அவர் முன் ஜாமின் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகி உள்ளவர்.

 

 

மேலும் கள்ளக்குறிச்சி மாவட்ட மகளிர் காவல் நிலையத்திலிருந்து அவருக்கு சம்மன் வழங்கப்பட்டது இன்று காலை கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் போலீசார் ஒரு வீட்டிற்கு சென்றனர் அங்கு அவர்களுக்கு வீட்டில் கேட்டதுக்கு எம்.எல். ஏ மாடியில் இருக்கிறார் என தெரிவித்துள்ள போலீசார் மாடியில் இருந்த எம்எல்ஏவிடம் சம்மன் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் கலெக்டர் பத்மஜா வீடு மற்றும் அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

 

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டராக பணியாற்றி வருபவர் பத்மஜா. விழுப்புரம் மாவட்ட கூடுதல் கலெக்டராக பணியாற்றி வந்த இவர் கடந்த மே மாதம் கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டராக மாற்றம் செய்யப்பட்டார். இவருக்கு கள்ளக்குறிச்சி(தனி) த.வெ.க. எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் (வயது 36), தனது செல்போனில் இருந்து ஆபாச குறுஞ்செய்தி அனுப்பினார்.

 

 

இச்சம்பவம் தொடர்பாக கலெக்டரின் கணவரான ஷேக் அப்துல் ரஹ்மான் விழுப்புரம் சரக டி.ஐ.ஜி. மூலம் கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் விசாரிக்குமாறு அறிவுறுத்தி உள்ளார். சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியானது. இதனிடையே எம்.எல்.ஏ., கலெக்டரான பத்மஜாவுக்கு தனது செல்போனில் இருந்து ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாகவும், மதுபோதையில் அவரது வீட்டுக்கே சென்று தொந்தரவு செய்ததாகவும் கடந்த 8-ந்தேதி முதல் சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது.

 

கள்ளக்குறிச்சி கச்சிராயப்பாளையம் சாலையில் வசித்து வருபவர் அருள்விக்னேஷ் (வயது 36). இவர் 9.5.1990 அன்று பிறந்தார். இவருடைய பெற்றோர் சின்னையா-லட்சுமி ஆவார்கள். இவருக்கு திருமணமாகி சிவசங்கரி என்ற மனைவியும், ரவீணாஸ்ரீ(3) என்ற பெண் குழந்தையும் உள்ளது. எம்.எஸ்.சி. படித்துள்ள இவர், கள்ளக்குறிச்சி அடுத்த தச்சூரில் புல்வெளி கிரிக்கெட் மைதானம்அமைத்து நடத்தி வந்தார்.

 

 

கடந்த ஆண்டு அக்டோபரில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த அருள்விக்னேசுக்கு கள்ளக்குறிச்சி மேற்கு மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் பொறுப்பு வழங்கப்பட்டது. தொடர்ந்து கடந்த சட்டமன்ற தேர்தலில் கள்ளக்குறிச்சி (தனி) சட்டமன்ற தொகுதியில் போட்டியிட கட்சி தலைமை அவருக்கு வாய்ப்பு வழங்கியது. இதையடுத்து தேர்தலில் போட்டியிட்ட அருள் விக்னேஷ், தன்னை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளர் ராஜீவ்காந்தியை 798 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். தொடர்ந்து அவர் கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்று பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon