--- --:--:-- --

தீபத்தூணில் தீபம் ஏற்ற அதிகாரம் கொண்ட குழு பரிந்துரைக்கப்படவில்லை; உச்சநீதிமன்றத்தில் ஆட்சியர் அறிக்கை

13

திருப்பரங்குன்றம் தீப விவகாரம் தொடர்பாக மதுரை மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா உச்சநீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளார். அதில், திருப்பரங்குன்றம் மலை தீபத்தூணில் தீபம் ஏற்றுவதற்கான அதிகாரம் கோயில் தேவஸ்தானத்திற்கு வழங்கப்பட்டுள்ள நிலையில், தேவஸ்தானத்தால் அங்கீகரிக்கப்பட்ட குழு அமைக்கப்பட்டு, அதன் உறுப்பினர்களின் பெயர்கள் மாவட்ட நிர்வாகத்திடம் தெரிவிக்கப்படவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

 

இதுதொடர்பாக இந்து சமய அறநிலையத் துறை செயலாளருக்கும் மாவட்ட ஆட்சியர் என்ற முறையில் மின்னஞ்சல் மூலம் நினைவூட்டல் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டதாகத் தெரிவித்துள்ளார். இருப்பினும், தீபத்தூணில் தீபம் ஏற்றுவதற்கான அதிகாரம் கொண்ட குழு பரிந்துரைக்கப்படாததால், அதற்குப் பதிலாக அறங்காவலர் குழுவினர் வழக்கமாக தீபம் ஏற்றப்படும் இடத்திலேயே தீபம் ஏற்றத் தீர்மானித்ததாகவும் தனது அறிக்கையில் விளக்கம் அளித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon