உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரான போக்கு; முதலமைச்சர் விஜய் விளைவுகளைச் சந்திப்பார் – நயினார் நாகேந்திரன்
உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரான போக்கைக் கடைப்பிடிப்பதன் விளைவுகளை முதலமைச்சர் விஜய் சந்தித்தே தீருவார் என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். தமிழக அரசின் செயல்பாடு இந்துக்களுக்கு எதிரானது மட்டுமல்ல, அரசமைப்புச் சட்டத்திற்கும் எதிரானது என அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், சில அரசியல் கட்சிகளின் சூழ்ச்சியில் சிக்கி முதலமைச்சர் விஜய் வீணாகப் போகிறார் என்றும், உச்சநீதிமன்றத் தீர்ப்பை மதிக்காமல் செயல்படுவதால் ஏற்படும் விளைவுகளை அவர் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்றும் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




