--- --:--:-- --

2வது வெற்றி முதலீட்டாளர்கள் மாநாடு – முதலமைச்சர் விஜய் தலைமையில் இன்று நடக்கிறது

3

முதலமைச்சர் விஜய் தலைமையில் சென்னை அருகே இன்று 2வது வெற்றி முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறுகிறது.தவெக அரசு பொறுப்பேற்றப் பிறகு கடந்த ஆகஸ்ட் 13 ஆம் தேதி சென்னையில் முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது. அப்போது 67,452 கோடி ரூபாய் மதிப்பிலான 97 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதன் மூலம் சுமார் ஒரு லட்சம் பேருக்கு புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டது. அப்போது பொறுப்பேற்ற 100 நாட்களில் ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் முதலீடுகளை ஈர்த்துள்ளதாக தமிழ்நாடு அரசு பெருமிதம் தெரிவித்தது.

 

மேலும், ஜெர்மனி, அமெரிக்கா, தென்கொரியா, ஜப்பான் உள்ளிட்ட 15 நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்தன. 67,452 கோடி ரூபாய் முதலீட்டில், தமிழ்நாட்டின் 20 மாவட்டங்களில் தொழில் தொடங்க திட்டமிடப்பட்டன. குறிப்பாக, ராக்கெட் தயாரிக்கும் தனியார் நிறுவனமான ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் மற்றும் மீண்டும் பயன்படுத்தக்கூடிய வகையிலான ராக்கெட் தயாரிக்கும் அக்னிகுல் காஸ்மோஸ் ஆகிய 2 நிறுவனங்கள் தூத்துக்குடியில் முதலீடு செய்துள்ளன.

 

 

இதேபோல, காஞ்சிபுரம் மாவட்டத்தில் 5,143 கோடி ரூபாயில் டயர் உற்பத்தி ஆலையை அமைக்க ஜே.கே.டயர் நிறுவனமும், 300 கோடியில் HVAC கம்ப்ரசர் உற்பத்தி ஆலையைத் தொடங்க ஜெர்மனியின் BITZER நிறுவனமும் ஒப்பந்தம் செய்துள்ளன. இந்நிலையில் இன்று சென்னை அருகே கோவளத்தில் 2வது வெற்றி தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு முதலமைச்சர் விஜய் தலைமையில் நடைபெற உள்ளது. இதில் 85 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon