--- --:--:-- --

சபரிமலை தரிசனம்: அனுமதி கேட்ட 3-ம் பாலினத்தவர் மனுவை தள்ளுபடி செய்த ஐகோர்ட்

4

சபரிமலையில் சுவாமி தரிசனத்துக்கு அனுமதி வழங்க திருவிதாங்கூர் தேவசம்போர்டுக்கு உத்தரவிடக் கோரி சென்னையைச் சேர்ந்த மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்தவர் தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு ஏற்க, சென்னை உயர்நீதிமன்றம் மறுத்து விட்டது.சென்னையைச் சேர்ந்த தமிழ்நாடு மூன்றாம் பாலினத்தவர் நல வாரிய உறுப்பினரான அனுஸ்ரீ, தாக்கல் செய்த மனுவில், சபரிமலை ஐயப்பன் கோவிலில் தரிசனம் செய்ய அனுமதிக்கும்படி, திருவிதாங்கூர் தேவசம்போர்டுக்கு உத்தரவிடக் கோரியிருந்தார்.

 

மேலும், அந்த மனுவில், கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் சபரிமலை சென்று வருவதாகவும், கடந்த ஜனவரி மாதம், 15 மூன்றாம் பாலினத்தவர்களுடன் சுவாமி தரிசனத்துக்கு செல்ல முயன்ற போது, பம்பையில் தடுத்து நிறுத்தப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.இதுசம்பந்தமாக திருவிதாங்கூர் தேவசம்போடு, கேரளம் அரசுக்கு மனு அளித்தும் அதனை பரிசீலிக்கவில்லை என்பதால், பாலின பாகுபாடு காட்டாமல், சபரிமலை செல்ல அனுமதிக்கும்படி உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரியிருக்கிறார்.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வு, கேரளாவில் உள்ள கோவில் சம்பந்தமாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள இந்த வழக்கு எப்படி விசாரணைக்கு உகந்தது எனக் கேள்வி எழுப்பியது.
மேலும், இதே கோரிக்கையுடன் கேரள உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள வழக்கு நிலுவையில் உள்ளது. எதிர்மனுதாரர்கள் கேரளாவில் உள்ளதாகக் கூறி, மனுவை விசாரணைக்கு ஏற்க நீதிபதிகள் மறுத்தனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon