--- --:--:-- --

பேரூர் கோவிலில் தங்கம் திருடு போனதாக புகார்: அதிகாரிகள் விசாரணை

5

கோவை நகரின் மத்தியில் கோணியம்மன் கோவில் உள்ளது. இங்கு உண்டியல் காணிக்கை எண்ணும் பணியின் போது முறைகேடு நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது. இதில் முறைகேடு நடந்தது உறுதியான நிலையில் கோவில் ஊழியர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

 

இந்த பரபரப்பு அடங்குவதற்குள், கோவை அடுத்த பேரூர் பட்டீஸ்வரர் கோவிலிலும் உண்டில் காணிக்கை எண்ணும் பணியின் போது முறைகேடு நடந்து இருப்பதாக புகார் எழுந்தது. இந்நிலையில் ஜலேந்திரன் என்ற பக்தர் பட்டீஸ்வரர் கோவில் உண்டியல்களை திறந்து காணிக்கைகளை எண்ணும் போது தங்கம் அடிக்கடி மாயமாவதாக இணை ஆணையர் ரமேஷ் மற்றும் கோவில் உதவி ஆணையர் சத்தியவதி ஆகியோரிடம் புகார் செய்யப்பட்டதாக கூறப்படுகின்றது.

 

அந்த புகாரின் பேரில் கோவில் ஊழியர்கள் 40- க்கும் மேற்பட்டோரிடம் உதவி ஆணையர் சத்தியவதி விசாரணை நடத்தினார். அப்பொழுது தற்காலிக பெண் பணியாளர் மீது குற்றம் சாட்டப்பட்டது. அந்த பெண் பணியாளரிடம் தொடர் விசாரணை நடக்கிறது.

 

இது தொடர்பாக அதிகாரிகள் தெரிவித்த தகவல் படி, புகாரின் பேரில் அனைத்து பணியாளர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விசாரணை முடிவில் புகார் கூறப்பட்டது உண்மை என தெரிய வந்தால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். கோவையில் முக்கிய கோவில்களில் உண்டியல் காணிக்கை முறைகேடு புகார் எழுந்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது போன்ற சம்பவங்களால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon