ரயிலில் செல்ல ஆசைப்பட்டு சென்ற எட்டு வயது சிறுவனை மீட்ட காவல்துறையினர்..!
பட்டுக்கோட்டைக்கு ரயில் ஏறி சென்ற திருவாரூரை சேர்ந்த சிறுவனை மீட்டு பெற்றோரிடம் காவல்துறையினர் ஒப்படைத்தனர். திருத்துறைப்பூண்டியை சேர்ந்த எட்டு வயது சிறுவன் ரயிலில் செல்ல ஆசைப்பட்டு தனியாக பட்டுக்கோட்டைக்கு ரயிலில் சென்றுள்ளார்.
அங்கிருந்து வீட்டிற்கு எப்படி செல்ல வேண்டும் என்பது தெரியாமல் சுற்றி திரிந்துள்ளான். இதனை பார்த்த ரயில்வே காவலர்கள் சிறுவனை பிடித்து விசாரித்தனர். மேலும் தந்தையின் செல்போன் எண்ணை கேட்டறிந்து காவல்துறையினர் பேசி உள்ளனர்.
அதன்படி சிறுவனின் தந்தையை நேரில் வரவழைத்து ஒப்படைத்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





