--- --:--:-- --

விஜய் பிரசாரத்திற்கு வருவார் என த.வெ.க அறிவிப்பு..!

10

டந்த ஏப்ரல் மாதம் தமிழ்நாட்டில் நடந்த சட்டசபைத் தேர்தலில் த.வெ.க தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. இதில் முதலமைச்சர் விஜய் ,பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளில் வெற்றி பெற்றதை அடுத்து திருச்சி கிழக்கு தொகுதியை ராஜினாமா செய்தார்.

 

மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், விராலிமலை, கரூர், பெருந்துறை ஆகிய தொகுதிகளில் வென்ற அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் ஆறு பேர், தங்கள் பதவிகளை ராஜினாமா செய்து விட்டு, த.வெ.க-வில் இணைந்தனர். இதனால், ஏழு சட்டசபை தொகுதிகள் காலியாக உள்ளன.

இவற்றில், மதுராந்தகம், தாராபுரம் சட்டசபை தொகுதிகள் தவிர, மீதமுள்ள ஐந்து தொகுதிகளில் தேர்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. எனவே, அந்த தொகுதிகளை தவிர்த்து விட்டு, மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு, அடுத்த மாதம் 6-ம் தேதி இடைத்தேர்தல் நடக்கும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

 

 

மதுராந்தகம், தாராபுரம் சட்டசபை தொகுதிகளில், தி.மு.க, அ.தி.மு.க, த.வெ.க, கம்யூனிஸ்டுகள், நாம் தமிழர் கட்சி என, ஐந்து முனை போட்டி ஏற்பட்டுள்ளது. த.வெ.க சந்திக்கும் முதல் இடைத்தேர்தல் இதுவாகும். அ.தி.மு.க-வில் இருந்து த.வெ.க-வில் இணைந்த மரகதம் குமரவேல், மதுராந்தகம் தொகுதியிலும், சத்யபாமா, தாராபுரம் தொகுதியிலும், த.வெ.க வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

 

 

இதுபோல மதுராந்தகத்தில், தி.மு.க சார்பில் பரந்தாமன், அ.தி.மு.க சார்பில் கணிதா சம்பத், நாம் தமிழர் கட்சி சார்பில் ஜானகிராமன் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். தாராபுரத்தில், தி.மு.க., சார்பில் சுகன்யா, அ.தி.மு.க., சார்பில் பானுமதி, நா.த.க., சார்பில் கார்த்திகா ஆகியோர் களமிறக்கப்பட்டுள்ளனர்.

 

 

இந்நிலையில், ஈரோட்டில் அமைச்சர் செங்கோட்டையன் அளித்த பேட்டியில்,
தாராபுரம், மதுராந்தகம் தொகுதிகளில் அக்டோபர் 6-ஆம் தேதி நடக்கும் இடைத்தேர்தலில், த.வெ.க சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள், வரும் 16-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்வார்கள். பிரசாரத்துக்கு முதல்வர் விஜய் வருவது குறித்து பின்னர் தெரிவிப்போம். இடைத்தேர்தலில், த.வெ.க-வுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. விமர்சனங்களை தாங்கிக் கொள்ளும் சக்தி எங்களுக்கு உள்ளது, அதேநேரம், விமர்சனங்கள் நேர்மையாக இருப்பது அவசியம் என்றார்.முன்னதாக, தாராபுரம் இடைத்தேர்தல் பிரச்சாரத்திற்கு முதல்வர் விஜய் கண்டிப்பாக வருவார் என த.வெ.க வேட்பாளர் சத்தியபாமா நம்பிக்கை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon