--- --:--:-- --

உச்ச நீதிமன்றத்திற்கு இரண்டு வாரம் விடுமுறை அறிவிப்பு..!

4

ச்ச நீதி மன்றத்திற்கு இன்று முதல் இரண்டு வாரங்களுக்கு குளிர்கால விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால் ஜனவரி 1ஆம் தேதி வரை சிறப்பு அமர்வுகள் செயல்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசேகர் வெளியிட்டு அறிவிப்பில் இன்று முதல் அடுத்த மாதம் 1ம் தேதி வரை உச்ச நீதிமன்றத்திற்கு குளிர்கால விடுமுறை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அடுத்த இரண்டு வாரங்களுக்கு உச்சநீதிமன்றத்தில் சிறப்பு அமர்வுகள் எதுவும் செயல்படாது என கூறப்பட்டுள்ளது.

 

ஜனவரி 2ஆம் தேதி முதல் உச்சநீதிமன்றம் வழக்கம் போல் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மிக மிக அத்தியாவசியமான வழக்குகள் மட்டும் விசாரிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon