--- --:--:-- --
3

செப்டம்பர் மாத தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை ஏற்ற இறக்கத்தைச் சந்தித்து வருகிறது. அந்த வகையில், நேற்று செப்டம்பர் 17ஆம் தேதி 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.55 குறைந்து ஒரு கிராம் ரூ.14,010க்கும் சவரனுக்கு ரூ.440 குறைந்து ஒரு சவரன் ரூ.1,12,080க்கும் விற்பனை செய்யப்பட்டது.

 

தொடர்ந்து இன்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளதால் நகை பிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். அதன் படி 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.145 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,155க்கும் சவரனுக்கு ரூ.1,160 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,13,240க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

 

 

அதே போல 18 காரட் தங்கம் விலையும் கிராமுக்கு ரூ.145 உயர்ந்து ஒரு கிராம் ரூ.11,925க்கும், சவரனுக்கு ரூ.1,160 உயர்ந்து ஒரு சவரன் ரூ.95,400க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ஒரு கிராம் ரூ.255க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 55 ஆயிரத்திற்கும் விற்பனை செய்யப்படுகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon