காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி நேற்றுடன் நிறைவு..!
வாரணாசியில் சுமார் ஒரு மாத காலம் நடைபெற்று வந்த காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி நேற்றுடன் நிறைவு பெற்றது. கடைசி நாள் விழாவில் உள்துறை அமைச்சர், தமிழக ஆளுநர் ரவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தமிழகத்தின் கலாச்சாரங்களுக்கு இடையேயான பழமையான தொடர்களைக் கொண்டாடும் வகையில் மத்திய அரசால் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சி கடந்த மாதம் 19ஆம் தேதி தொடங்கியது.
பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கி வைக்கப்பட்ட காசி தமிழ் சங்கத்தில் இளையராஜாவின் இன்னிசை நிகழ்ச்சியும் நடைபெற்றது. மாணவர்கள், நாட்டுப்புற கலைஞர்கள் என பல்வேறு தரப்பினர் தொடர்ச்சியாக பங்கேற்றனர்.
இந்நிலையில் நிறைவு நாள் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. அதில் மத்திய உள்துறை அமைச்சர், கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், கலாச்சாரத்துறை அமைச்சர் சான் ரெட்டி, மத்திய இணை அமைச்சர் முருகன், தமிழக ஆளுநர் ரவி, உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷா, வாரணாசி நகரம் மட்டுமல்லாது வட இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் வசிப்போர் தற்பொழுது திறனை கொண்டுள்ளனர் என்றும் தன் தமிழின் தொன்மை குறித்தும் பேசி உள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





