--- --:--:-- --

மாணவர் பாரதிதாசனுக்கான கட்டணத்தைக் கட்டிப் படிக்க வைப்போம் – மு.க.ஸ்டாலின்

02

திர்க்கட்சியாகவே இருந்தாலும் அவப்பெயரைத் த.வெ.க. அரசு சுமக்க வேண்டாம் என்பதே என் வேண்டுகோள்.” என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மலேசியாவில் அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி திட்டத்தில் ஆராய்ச்சி படிப்பு படித்து வரும் மாணவர் பாரதிதாசன், தற்போது வரை அரசின் உதவித்தொகை வரவில்லை எனக் கண்ணீருடன் வீடியோ வெளியிட்டுள்ளார்.

 

 

இந்நிலையில், மாணவர் பாரதிதாசனைப் பழிவாங்க, அவருடைய கல்வியைப் பாழாக்கும் வேலையில் தவெக அரசு இறங்கி இருப்பது ஏற்க முடியாது என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கண்டனம் தெரிவித்துள்ளார். அதேபோல் முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலின் இது தொடர்பாக வெளியிட்டுள்ள பதிவில், “எதைப் பற்றியும் கவலைப்படாமல் படியுங்கள். உங்களுக்கு என்ன தேவையென்றாலும் நமது அரசு நிறைவேற்றித் தரும்” என்ற நம்பிக்கையை முதலமைச்சராக ஒவ்வொரு மேடையிலும் விதைத்தவன் என்ற வகையில், இந்தத் தம்பியின் கண்ணீர் நெஞ்சைக் கனக்கச் செய்கிறது.

 

அவர் கேட்பது உதவியல்ல, அரசு சார்பில் அவருக்கு உறுதியளிக்கப்பட்ட உரிமையைத்தான் கோருகிறார். ஆட்சி மாற்றம் ஏற்பட்ட காரணத்தாலேயே ஒரு மாணவரின் பல ஆண்டு உயர்கல்விக் கனவு பாழாகக் கூடாது. ரோகித் வெமுலாவுக்கு நடந்தது போல எனக்கும் நடக்கிறது என்கிறார். எங்களுக்கு எதிர்க்கட்சியாகவே இருந்தாலும் அப்படி ஒரு அவப்பெயரைத் த.வெ.க. அரசு சுமக்க வேண்டாம் என்பதே என் வேண்டுகோள்.

 

மாணவர் பாரதிதாசனுக்குத் தேவைப்படும் நிதியை வழங்க முடியாது என்றால் அதனை முதலமைச்சர் வெளிப்படையாக அறிவித்துவிடவும். தி.மு.க.வும் தமிழ்நாட்டு மக்களும் அந்த மாணவருக்கான கல்விக் கட்டணத்தைக் கட்டிப் படிக்க வைப்போம்!” என்று தெரிவித்துள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon