40 அடி ஆழக்கிணற்றில் தவறி விழுந்த பெண்..!
சென்னை மூலக்கடையில் 40 அடி ஆழத்தில் தவறி விழுந்த பெண்ணை தீயணைப்புத் துறையினர் பத்திரமாக மீட்டனர். விஜயலட்சுமி என்பவர் பேருந்து நிலையத்தில் காத்திருந்த பொழுது இயற்கை உபாதையை கழிப்பதற்காக அருகிலுள்ள இருட்டான பகுதிக்கு சென்றுள்ளார்.
அப்பொழுது அங்கிருந்து சுற்றுச்சுவர் இல்லாததால் 40 அடி ஆழமுள்ள கிணற்றில் விஜயலட்சுமி தாமரைப்படைந்தார். அவரது சத்தம் கேட்டு பார்த்த மக்கள் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். அவரை கயிறு கட்டி பத்திரமாக மீட்டனர்.





