சாலையை கடக்க முயன்ற மாடு மீது மோதிய விபத்தில் கல்லூரி மாணவர் பலி..!
மாமல்லபுரம் அருகே சாலையை கடக்க முயன்ற மாடு மீது இருசக்கர வாகன மோதிய விபத்தில் கல்லூரி மாணவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த விஷ்ணுவரதன் என்பவர் தனது நண்பருடன் மாமல்லபுரத்தை சென்று பார்ப்பதற்காக இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர்.
மாமல்லபுரத்தை பார்த்து விட்டு வீடு திரும்பும் பொழுது சாலையை கடக்க முயன்ற மாடு மீது இருசக்கர வாகனம் மோதியது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். அப்பொழுது பின்னல் வந்த கார் ஒன்று வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் விஷ்ணுவரதன் மீது ஏறி இறங்கியது.
இதில் அவர் சம்பவ இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்த போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.





