--- --:--:-- --

எதிர்காலத்திற்கான உறுதியான தொடக்கத்தை இந்தியா மேற்கொண்டு இருக்கிறது..!

5

பாதுகாப்பு துறையில் எதிர்காலத்திற்கான உறுதியான தொடக்கத்தை இந்தியா மேற்கொண்டு இருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். குஜராத்தில் ஐந்து நாட்கள் நடைபெறும் இரண்டாவது பாதுகாப்புத்துறை கண்காட்சியில் பேசிய பிரதமர் குஜராத் மாநிலத்தில் நடைபெற்று வரும் பாதுகாப்பு கண்காட்சி இந்தியாவின் பிரம்மாண்டத்தை காட்டுவதாகவும் இந்தியாவின் வளர்ச்சியில் மாநிலங்களின் பங்களிப்பும் இளைஞர்களின் சக்தி மற்றும் இளைஞர்களின் கனவு, திறன்கள் ஆகியவை ஒன்று சேர்ந்து பாதுகாப்பு கண்காட்சி என்றும் கூறினார்.

 

இதற்கு முன்பு இந்தியாவில் பாதுகாப்பு கண்காட்சி நடத்தப்பட்டுள்ளது என்றவர் ஆனால் இது முற்றிலும் மாறுபட்ட பிரம்மாண்ட தொடக்கத்தின் சின்னம் என கூறினார். முழுக்க முழுக்க இந்திய நிறுவனங்கள் மட்டுமே தங்கியிருக்கும் முதல் கண்காட்சி இது என்றும் இந்த கண்காட்சியில் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் மட்டுமே காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது எனவும் பிரதமர் தெரிவித்தார்.

 

Right Menu Icon