பாம்பிடம் இருந்து நூலிழையில் உயிர் தப்பிய மாணவன்..!
கேரள மாநிலம் குன்னத்தூரில் பள்ளி மாணவன் ஒருவன் பாம்பிடம் இருந்து நூலிழையில் உயிர் தப்பியது தொடர்பான காட்சிகள் சிசிடிவியில் பதிவாகியுள்ளன.
மாணவன் வீட்டிற்குள் சென்ற பொழுது மதில் சுவரில் இருந்த பூச்செடியில் பதுங்கியிருந்த நல்ல பாம்பு ஒன்று அவனை சீண்ட முயன்றது. இதனை பார்த்த மாணவன் அலறியடித்து கொண்டு ஓடினார். சிறிது நேரத்திலேயே பாம்பு அங்கிருந்து வெளியேறியது.



