--- --:--:-- --

திருமணமான ஒரே ஆண்டில் வரதட்சனை கொடுமையால் இளம்பெண் தற்கொலை..!

4

ள்ளக்குறிச்சி மாவட்டம் சந்தைப்பேட்டை பகுதியில் திருமணமான ஒரே ஆண்டில் வரதட்சனை கொடுமையால் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருவரும் காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் கடந்த ஆண்டு திருமணம் செய்துள்ளனர்.

 

சில மாதங்களிலேயே கணவர் வீட்டில் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாக கருவுற்ற நிலையில் தாய் வீட்டிற்கு திரும்பியுள்ளார். இரண்டு மாதங்களுக்கு முன் பெண் குழந்தை பிறந்த நிலையில் கடிதம் எழுதி வைத்துவிட்டு அவர் விஷம் சாப்பிட்டுள்ளார்.

 

மருத்துவமனைக்கு செல்லும் வழியில் அவரது உயிர் பிரிந்ததாக கூறப்படுகிறது. இதனை வீடியோவாக பதிவு செய்துள்ள பதிவு செய்த காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

 

Right Menu Icon