--- --:--:-- --

சிவாங்கியை பார்க்க பொது மக்கள் கூடியதால்போக்குவரத்து நெரிசல்..!

7

தேனி மாவட்டம் கம்பம் அருகே சின்னத்திரை நடிகையை பார்ப்பதற்கு பொதுமக்கள் கூடியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தனியார் கடை திறப்பு விழாவில் பிரபல பாடகியும் சின்னத்திரை நடிகையுமான சிவாங்கி உரையாற்றினார். நடிகையை பார்ப்பதற்காக வந்த பொதுமக்கள் சாலையில் ஒன்று திரண்டனர்.

 

அந்த பகுதியில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தேனி – குமுளி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் அந்தப் பகுதியில் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைந்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon