அமைச்சர் சொல்வது உண்மையா? : வன்னிஅரசு பேச்சுக்கு எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கேள்வி
தமிழக சட்டப்பேரவையில் அமைச்சர் வன்னிஅரசு பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்துப் பேசிய முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், “யாரும் போகாத பகுதிக்குச் சென்றதாக அமைச்சர் வன்னிஅரசு கூறுகிறார்.
நாங்கள் கொண்டு வந்த திட்டங்கள் அங்கு இருக்கிறது என்றால் நாங்கள் போகாமல் எப்படி அத்திட்டங்கள் வந்திருக்கும்? மேலும், 7,000 பேருக்கு சாதிச் சான்றிதழ் வழங்கியதாகக் குறிப்பிடும் நிலையில், 100 நாட்களில் இது எப்படிச் சாத்தியம், உரிய சரிபார்ப்புகள் நடந்ததா, அவர் கூறும் தகவல் உண்மையா?” எனக் கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து பேசிய அவர், நீங்கள் மட்டுமே எல்லாம் செய்தது போலவும், நாங்கள் எதுவுமே செய்யாதது போலவும் ஒரு தோற்றத்தை ஏற்படுத்த முயல்கிறீர்கள் என்றும் கடுமையாக விமர்சித்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




