அமைச்சர் கீர்த்தனா பேச்சுக்கு தி.மு.க-வினர் கடும் எதிர்ப்பு..!
தமிழக சட்டப்பேரவையில், கடந்த ஆட்சியில் பட்டாசு ஆலைகளுக்கு உரிமம் (லைசன்ஸ்) வழங்குவதில் லஞ்சம் பெறப்பட்டதாகக் குற்றம்சாட்டி அமைச்சர் கீர்த்தனா பேசியதற்கு திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
குறிப்பாக, தி.மு.க உறுப்பினர்களான தங்கம் தென்னரசு மற்றும் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் ஆகியோர் அமைச்சர் கீர்த்தனாவின் பேச்சை எதிர்த்து அவையில் முழக்கமிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்தச் சலசலப்பைத் தொடர்ந்து பேசிய அவை முன்னவர் செங்கோட்டையன், அமைச்சர் குறிப்பிட்ட நபர்களின் பெயரைக் குறிப்பிட்டுப் பேசவில்லை என்றும், ஊழல் குறித்துப் பொதுவாகவே சுட்டிக்காட்டினார் என்றும் தெளிவுபடுத்தி அவையை அமைதிப்படுத்தினார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




