சட்டமன்ற நேர நீடிப்பு குறித்து தி.மு.க கொறடா எ.வ.வேலு பேச்சு..!
தமிழக சட்டப்பேரவையில் அவை நடவடிக்கைகள் குறித்துப் பேசிய தி.மு.க கொறடா எ.வ.வேலு, “முன்பெல்லாம் பேரவையில் இரண்டு மானியக் கோரிக்கைகள் மட்டுமே பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும், பிற்பகல் ஒன்றரை மணிக்கெல்லாம் விவாதங்களை முடித்துக்கொண்டு உணவு இடைவேளைக்குச் சென்றுவிடுவோம்.
ஆனால், இன்று காலை 9.30 மணிக்குத் தொடங்கும் சட்டமன்றக் கூட்டத்தொடர் இரவு 7.30 மணி வரை நீடிக்கிறது. அவ்வாறு நேரம் நீட்டிக்கப்பட்ட போதிலும் எங்களுக்கு வெறும் மூன்று பேருக்கு மட்டுமே பேசுவதற்கு அனுமதி வழங்குகிறீர்கள்” என்று தனது கருத்துக்களைப் பதிவு செய்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




