உணவகத்தில் காடை வறுவலில் புழு இருந்ததாக எழுந்த புகார்..!
ஆரணியில் உள்ள மதுரை பாண்டியன் உணவகத்தில் வாடிக்கையாளருக்கு வழங்கப்பட்ட காடை வறுவலில் புழு இருந்ததாக எழுந்த புகார் குறித்து உணவு பாதுகாப்பு துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். நேற்று முன்தினம் இந்த உலகத்திற்கு சென்ற ஒருவர் காடை வறுவல் ஆர்டர் செய்துள்ளார்.
அவருக்கு வழங்கப்பட்ட காடை வறுவலில் புழு இருந்ததாகக் கூறப்படும் நிலையில் அவர் ஹோட்டல் நிர்வாகத்தினர் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இது குறித்த புகாரின் பேரில் உணவகத்திற்கு வந்து ஆய்வு மேற்கொண்ட உணவுப் பாதுகாப்புத் துறையினர் புழு இருந்ததாக கூறப்படும் உணவை ஆய்வுக்கு அனுப்பி வைத்துள்ளனர். முடிவுகள் வந்த பிறகு நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





