--- --:--:-- --

3 மாவட்டங்களில் இன்று மழை..!

5

சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று மிதமான மழை பெய்யக்கூடும் எனவும், சென்னை, திருவள்ளூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

அதேபோல், நாளை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், கடலூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், தஞ்சை, புதுக்கோட்டை, மதுரை, விருதுநகர், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. நாளை மறுநாள், மதுரை, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக எச்சரித்துள்ள வானிலை மையம் தென் கடலோர தமிழகத்தில் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் கணித்துள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon